எனக்குள் எழுந்த கேள்விக்கு பதில் காண
முயன்றேன். அநேக சாட்சிகளை கவனித்தேன். அவர்கள் கூறுவது பொய்யாக இருக்குமோ? என்று அவற்றை
ஆராய முயன்றேன். இந்த சமயத்தில் தான் நான் மிகவும் மதித்த அறிவியலின் கோணத்தில் என்னுள்
ஒரு கேள்வி எழுந்தது. என் நண்பனுடனான ஒரு விவாதத்தின் போது என்னிடம் அவன் எழுப்பிய
ஒரு கேள்வி ,”கடல் அலைகள் எப்படி உருவாகின்றன?” என்று வினவினான். நான் அதற்கு அவனிடம்
வழக்கமான பதிலான “நிலவின் ஈர்ப்பு விசை தான் காரணம் என்று பதில் அளித்தேன். “உனக்கு
எப்படி தெரியும்?” என்று கேட்டான். “அறிவியல் அதைத் தானே கூறுகிறது” என்று பதில் அளித்தேன்.
அவன் நக்கலாக, “அறிவியல் என்ன கூறினாலும் நம்புவியா?” என்று வினவினான். அவன் நக்கலாகக்
கூறி விட்டு சென்று விட்டான் ஆனால் என்னை அந்தக் கேள்வி மிகவும் பாதித்தது. அப்பொழுதிருந்து
கடல் அலைகளுக்கான காரணத்தை அறிய சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல புத்தகங்கள் படித்தேன்.
அனைத்துமே வெறும் theory எனப்படும் கோட்பாடாகவே இருந்தது.
நிலவின் ஈர்ப்பு விசையினை விட, புவியின்
ஈர்ப்பு விசை பத்து மடங்கு அதிகம். இந்த நிலையில் எப்படி புவியில் இருக்கும் ஒரு பொருளை
அதை விட பத்து மடங்கு குறைவான ஈர்ப்பு விசையுள்ள நிலவால் இழுக்க முடியும்? என்ற கேள்வி
பிறந்தது. இந்த ஆராய்ச்சி என்னை மேலும் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகளுக்குள் இழுத்து
சென்றது. “நிலவு இருக்கட்டும், அது எப்படி சூரியனின் ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்கள்?” நான் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன்
என்பது மட்டும் எனக்கு அன்று புரிந்த்தது. ஏமாந்துப் போனது போல் ஒரு உணர்வு, நான் இவ்வளவு
நாள் கற்றுக் கொண்ட அறிவியலில் இவ்வளவு தர்க்கங்கள். இவற்றைப் பற்றி நான் ஒரு முறை
கூட சிந்தித்தது கிடையாதே! இன்னும் தோண்ட ஆரம்பித்தேன். எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே
பதிலாக கிடைத்துக் கொண்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக என்னுடைய அடுத்தடுத்தக் கட்டுரைகளில்
விவரிக்கிறேன்.
ஒரு தெரிந்த நண்பருடைய நண்பர் மிகவும்
பக்தி வைராக்கியமான குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய முக நூல் பக்கத்தை ஒரு முறை
ஆராய்ந்தப் பொழுது நான் பார்த்த ஒரு விஷயம் என்னை மிகவும் அதிர வைத்தது. அதில் கேட்டிருந்த
கேள்வி “இயேசுவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்பதற்கு அவர்கள் “இது ஒரு பெரிய நகைச்சுவை
அப்படி ஒருவர் இருந்தாரா என்ன?” என்று பொருள்படும் ஆங்கில வாக்கியத்தில் பதிலை தட்டச்சு
செய்து வைத்திருந்தார். ஆம், இன்று இளைஞர்கள் இவ்வாறு தான் இருக்கிறார்கள். விவாதித்து
நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்ட மனிதன் இன்று அலைப் பேசி என்னும் சிறு உலகத்தில் சிக்கிக்
கொண்டுள்ளான். அவன் நிலையோ கடவுளையே யாரென்று கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
இதற்கு நாம் எவ்வாறு தீர்வு காண போகிறோம் என்று தெரியவில்லை. எனக்கு இயற்பியலாளர் ஆல்பர்ட்
ஐன்ஸ்டின் கூறிய ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. ஆம், “நான் ஒரு விஷயத்திற்காக மட்டுமே பயப்படுகிறேன்,
ஒரு நாள் இந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியானது, நம்மிடையே இருக்கும் விவாதங்களைக்
குறைக்கும். அப்போது வருங்கால தலைமுறையே முட்டாள் ஆகி விடும்” என்று 19 – ம் நூற்றாண்டிலேயே
கூறி இருந்தார். அது இன்று அரங்கேறி வருவது மிகவும் வேதனையான விஷயம். இந்த நிலை மாறுமா?
அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.
No comments:
Post a Comment