கடவுளை
நாம் நேசிக்கிறோமா?
நாத்திகம் என்பது சாத்தானின் ஒரு வேலையாக
இருக்குமோ? என்ற கண்ணோட்டத்தோடு தான் நான் இந்த வலைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால்
கடந்த சில நாட்களில் நான் கற்ற மற்றும் பெற்ற சில அனுபவங்களை வைத்து பார்க்கும் போது
எந்தவித சந்தேகமும் இல்லாமல் அது சாத்தானின் வேலை தான் என்பது நிரூபணமாகிறது. ஆம்,
நான் கடந்த வாரத்தில் தான் “கெவின் ஹாவிந்த்” எனப்படும் ஒரு அமெரிக்க முனைவர் பட்டம்
பெற்ற, கடவுள் தான் உலகைப் படைத்தார், என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத் துடித்த
ஒரு மனிதரைப் பற்றி இணையதளம் வாயிலாக அறிந்தேன். அவர் நாத்திகவாதிகளான இரண்டு பேராசிரியர்களுடன்
நடத்திய விவாதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகவும், ஆழமான கருத்துடையதாகவும் கருதப்படுகின்றது.
அவர்கள் இருவரும், நீங்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த
கடவுளை யார் படைத்தார் என்பதைக் கூறவில்லையே என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் அதற்கு
அறிவியல் அடிப்படையிலேயே, அதுவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் இயற்பியலாளரின் கோட்பாட்டோடு
தொடர்புப் படுத்தி பதில் அளித்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஒவவொரு
காணொளிகளாக உலாவிப் பார்க்கத் தொடங்கினேன். அவரின் காணொளிகள் அனைத்துமே அறிவியலுக்கு
எதிரான கருத்துக்களைப் பரப்பி வந்தன. 2005 வரையிலான காணொளிகளை மட்டுமே என்னால் காண
முடிந்தது. அதன் பிறகு ஒரு மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டிலிருந்து
இருந்த காணொளிகளை காண முடிந்தது. இடைப் பட்ட நாட்களில் அவர் ஒன்றுமே செய்யவில்லையா
என்று ஆராய்ந்தப் பொழுது தான், அவர் செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த அமெரிக்க அரசாங்கம்
மற்றும் பல அறிவியலை சார்ந்து வாழ்ந்து வந்த நிறுவனங்கள் அனைத்துமே அவர் மீது பொய்யான
வழக்குளைப் போட்டு அவரை சிறைச் சாலையிலேத் தள்ளியிருந்ததுத் தெரிய வந்தது. அவரைச் சிறைப்
பிடிக்கச் சென்ற போது போலீசார் மிகவும் மோசமாக அவரிடமும் அவர் மனைவியிடமும் நடந்துக்
கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மனைவி விவாகரத்து வாங்கி அவரைப் பிரிந்துச் சென்றிருக்கிறார்.
அவரது சொத்துக்கள் அனைத்துமே முடக்கப்பட்டிருந்தன. 10 வருட சிறை வாசத்திற்குப் பிறகு
அவர் 2015 ஆம் ஆண்டு இறுதியில் தான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். மீண்டும்
அவர் தன் ஊழியத்தை செய்து வருகிறார். இவ்வளவு அடிகள் வாங்கியும் அவர் சளைக்கவில்லை.
மீண்டும் தேவப் பணியைத் தொடர்கிறார்.
அவர் மீது வீண் பழி சுமத்திய நாத்திக வாதிகளின்
அச்செயல் சாத்தானின் செயலாகத்தான் இருக்க வேண்டும். நிரந்தரமாக அவரை அழிக்க நினைத்த
சாத்தானின் சூழ்ச்சியை கடவுள் முறியடித்து அவர் பணியை மீண்டும் தொடர உதவி செய்தார்.
![]() |
Dr. Kevin Hovind |
நாத்திகத்தை நான் கிறிஸ்தவர்களின் இன்னொரு
செயல் வழியாகவும் காண்கிறேன். இன்று என் அலுவலகத்தில் என்னுடம் பணிபுரியும் ஒரு கிறிஸ்தவ
நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது தான் எனக்குத் தெரிந்தது நாத்திகம் இன்னொரு வாயிலாகவும்
இந்த சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது. ஆம், அவர்கள் அறியாமையால் மக்கள்
பாகால் மற்றும் மாற்று தெய்வங்களை வணங்குவதைப் பொருட்படுத்த விரும்பவில்லை. அப்படி
வணங்குவது அவரவர் விருப்பம் எனவும், அவர்களைத் திருத்துவதால் நமக்கு என்ன நன்மை விளையப்
போகிறது எனவும் வினவினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திக வாதியின் கேள்வியாகவே நான்
பாவிக்கிறேன். நம்மை நேசித்து நமக்காக உயிரைக் கொடுத்த இயேசு நாதர் இவ்வாறு நினைத்திருந்தால்
நம் நிலைமை என்னவாக இருந்திருக்குமோ? அது மட்டுமில்லாமல் நம்மைப் போல் பிறனையும் நேசிக்க
அவர் கூறியதன் பொருள், சுவிஷேத்தை அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் பிரசிங்கப்பது
மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.
நான் சிறிதும் எதிர் பாராதது கிறிஸ்தவர்களின் இந்த
மனநிலை தான். நடைமுறையில் இவற்றைக் கொண்டு வருவது சற்றுக் கடினம் தான். ஆனால் முடியாத
காரியம் அல்ல. நம்மை அளவு கடந்து நேசிக்கும் நம்முடைய தெய்வம் இயேசு கிறிஸ்துவை நாமும்
நேசிக்கிறோம் என்றால் இது சாத்தியமே!. நான் முதலில் இந்த வலைப்பதிவை எழுதுவது உபயோகமாக
இருக்குமா என்ற ஒரு ஐய்யத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனால், இன்றோ பல விஷயங்களை நான்
கற்றுக் கொள்ள மட்டும் அல்ல என்னால் முடிந்த வரை என் வாசகர்களுக்கும் கடவுளின் அன்பைப்
பற்றி கூறக் கடவுள் தந்த கிருபையை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன். மீண்டும்
தொடர்வேன்.
![]() |
வாழ்க
இயேசு நாமம்!!
No comments:
Post a Comment