நான் ஒரு பாரம் பரியம் மிக்க ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து
வளர்ந்தேன். அனைத்து ஞாயிறுகளிலும் ஆராதனைகள் மற்றும் ஓய்வு நாள் பாட சாலையில் பங்கெடுப்பது
என அனைத்து ஆலயம் சார்ந்த பணிகளிலும் அக்கறையோடு கலந்து கொண்டும் வந்தேன். ஆனால் என்னுள்
ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. எதனால் இந்த இயேசு என்ற மனிதர் கடவுள் என்று அனைவராலும்
அழைக்கப் படுகிறார்? அப்படி என்ன அவர் செய்து விட்டார்?. அவரை சிலுவையில் அறைந்தனர்
என்பதும் மற்றும் அவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதும் நான் அறிந்த ஒன்றே.
இருப்பினும் இவற்றை என் மனம் ஏற்க மறுத்த காலங்கள் உண்டு. நான் அறிவியலில் அதுவும்
மீநுண் துகளியல் தொழில்நுட்பப் பிரிவில் (Nanotechnoloy) முனைவர் பட்டப் படிப்பு படித்துக்
கொண்டிருக்கிறேன். என் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களானது இயற்பியலை அடிப்படையாகக்
கொண்டது.
எனவே எனக்கு அறிவியல் மற்றும் அதன் கண்டு பிடிப்புகள் மட்டுமே கடவுளாகப் பட்டன.
இது ஒன்றும் புதிதல்ல, இந்த உலகம் ஏற்கனவே நிறைய விஞ்ஞானிகளை நாத்திக வாதிகளாகக் கண்டிருக்கிறது.
நானும் அவர்கள் வழியைப் பின்பற்றி கடவுள் இல்லை, பைபிள் புனையப்பட்டப் பல கதைகளின்
தொகுப்பு என்றெல்லாம் வாதமிட்டும் இருக்கிறேன். நான் எவ்வாறு கடவுளின் வழியைத் திரும்ப
அடைந்தேன் என்பதை என் அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் நாத்திகம் பேசுதல் என்பது மிகவும் பரந்துக்
கிடப்பதுடன் அவர்கள் நாத்திக வாதிகள் என்று அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்கின்றனர். நாத்திகம்
என்பது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிகம் பரவி காணப்படும் ஒரு விஷச்செடி. இந்தியாவிலும்
நாத்திக வாதிகள் இருந்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அந்த எண்ணிக்கை மேலும்
உயர்ந்துள்ளது. ஏனெனில், இன்று அதிகம் நாத்திகம் பேசுபவர்கள் அதிகம் கிறிஸ்தவர்களாகத்
தான் இருக்கிறார்கள். என்னை இந்த கட்டுரை எழுதத் தூண்டியதே, என் நண்பன் ஒருவன் கடவுளே
இல்லை என்று பேசியது தான். அவனது அந்த பேச்சு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்னும்
எத்தனை தமிழ் கிறிஸ்தவர்கள் நாத்திக வாதிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நாத்திக வாதிகள் என்று சொல்லிக் கொள்வதால் தாங்கள் செய்யும் பாவங்களுக்கு
தண்டனை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. இதே மனநிலையில்
(நாத்திகம் பேசுதல்) நானும் இருந்திருக்கிறேன். இவற்றிற்கான காரணங்களை நான் ஆராய்ந்து
வைத்திருகிறேன். அவற்றை பின் வரும் என் கட்டுரைகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
வணக்கம்.
Masss....na pinnitenga....bt ithutha 😕😢😔
ReplyDeleteThanks sis
Delete